

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உயர்கல்வித் துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியாக நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெற கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.