மருத்துவ கழிவுகள்

மருத்துவ கழிவுகள்
மருத்துவ கழிவுகள்
Published on

நன்னிலம் அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரத்தில் ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சிகள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட கழிவுகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இதன் அருகில் உள்ள தூத்துக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீகடு ஏற்பட்டு தாற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக விவசாய பணிகளுக்காக வயல்களுக்கு நடந்து செல்லும் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மருத்துவ கழிவுகளால் அவதியடைந்து வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

எனவே இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் உரிய விசாரணை நடத்தி சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளை அகற்றி தாற்று நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com