

மதுரை,
குழந்தை தஷ்விக் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மருந்து டப்பாவை விழுங்கி விட்டான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தஷ்விக்கை உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை தஷ்விக் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோனான். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருந்து டப்பாவை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.