மருத்துவ ஆலோசனை முகாமில் 500 பேருக்கு மருந்து, மாத்திரை

மருத்துவ ஆலோசனை முகாமில் 500 பேருக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.
மருத்துவ ஆலோசனை முகாமில் 500 பேருக்கு மருந்து, மாத்திரை
Published on

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், சென்னை ஜெம் மருத்துவமனை இணைத்து நடத்திய இலவச மெகா மருத்துவ ஆலோசனை முகாம் திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை வகித்தார். சமூக சேவை சுகாதாரம் இயக்குனர் லீலா சுப்ரமணியம், ஏலகிரி வி.செல்வம், கே.சி.எழிலரசன், டி.வி.சதாசிவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, என்.வி.எஸ்.சங்க தலைவர் எஸ்.ராஜா, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார், ராமகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தலைவர் வக்கீல் எஸ்.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினர்.

மருத்துவ முகாமை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், சென்னை ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் பி.செந்தில்குமார் ஆகியோர் முகமை தொடங்கி வைத்து பேசினார்கள். முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய தினை, ராகி, சாமை, கேழ்வரகு போன்ற உணவுகளை பயன்படுத்த வேண்டும். துரித உணவான பீசா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டால் மருத்துவமனைக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கலாம் என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை, குடல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக செயலாளர் பி.சோமு, பொருளாளர் தேவராஜன், கே.எம்.சுப்பிரமணி, ஆர்.ஆர்.மனோகரன், கே.எம்.டி.சுபாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் செயலாளர் பாரதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com