தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (30.6.2025) தெடங்கி ஜூலை 5ம்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று இந்த கண்காட்சியை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி 3-வது மைல் காமராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் இந்த கண்காட்சி, மக்கள் மத்தியில் மருத்துவ அறிவையும், நோய் தடுப்பு விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 வரை நடைபெறும்.

கண்காட்சியில் மனித உடலமைப்பை விளக்கும் தெளிவான மாதிரிகள், முதலுதவி, CPR, BLS ஆகியவை பற்றிய நிகழ்நேர விளக்கங்கள், துறை வாரியாக கட்டமைக்கப்பட்ட விளக்க மையங்கள், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் புதுமைகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

இந்த மருத்துவ கண்காட்சியை பள்ளி மாணவர்கள் இன்று (30.6.2025) முதல் ஜூலை 3ம்தேதி வரையும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஆர்வலர்கள் ஜூலை 4, 5ம் தேதிகளும் பார்வையிட்டு பயன் பெறலாம் என்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியேர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com