குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது
குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
Published on

குடியாத்தம்

குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

குடியாத்தம் தங்கம் நகர், மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்க சட்ட ஆலோசகர் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணை கலெக்டர் எம்.கஜேந்திரன், தொழிலதிபர் எம்.எஸ்.நாகலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எல்.கமலவேணி, ஏ. பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு பூப்பல்லக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் குடியிருப்போர் நல சங்க செயலாளர் ஜி.லிங்கசாரதி, பொருளாளர் டி.கே.இளங்கோ, துணைத்தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் உள்பட நிர்வாகிகள், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கும்பாபிஷேக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com