

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.