மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் போராட்டம்

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார ஆஸ்பத்தியில் தலைமையிடமாக மீஞ்சூர் ஆஸ்பத்திரி விளங்குகிறது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வட்டார மருத்துவ அலுவலரின் உத்தரவின் பேரில் பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரிக்கு மாற்ற பணிக்கு செல்ல கூறினார். ஆனால் பயிற்சி டாக்டர் அங்கு செல்லாத நிலையில் ஏன் செல்லவில்லை என மருத்துவ அலுவலர் நிஜந்தன் கேட்டார்.

அதற்கு அவர் மற்றொரு மருத்துவ அலுவலர் டேவிட் செந்தில்குமார் தடுத்து நிறுத்தியதாக கூறியதையடுத்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அத்திரம் அடைந்த டேவிட் செந்தில்குமார் நிஜந்தனை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து நிஜந்தன் மீஞ்சூர் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மீஞ்சூர் போலீசார் டேவிட் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆஸ்பத்தியில் பணியாற்றும் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் டாக்டரை தாக்கிய டேவிட் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com