

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பக்கிரிசாமி, நகர துணை செயலாளர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி கார்த்தி வரவேற்றார். கூட்டத்தில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சத்தியமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் நகரசபை உறுப்பினர்கள் மதிவாணன், கிருஷ்ணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் சுரேஷ், மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.