அரூர் பகுதியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டங்கள்: முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது

அரூர் பகுதியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டங்கள்: முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது
Published on

தர்மபுரி மேற்கு மாவட்டம் அரூர் பேரூராட்சி 3-வது வார்டு விநாயகர் கோயில் தெரு, அரூர் மேற்கு ஒன்றியம் அச்சல்வாடி ஊராட்சி குடுமியாம்பட்டி, வடக்கு ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சி வேப்பநத்தம், கிழக்கு ஒன்றியம் வேடகட்டமடுவு ஆகிய இடங்களில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதன விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். அரூர் நகர செயலாளர் முல்லை ரவி, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடம்மாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டங்களில் தலைமை பேச்சாளர் தர்மபுரி அதியமான் கலந்து கொண்டு தமிழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இந்த கூட்டங்களில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விசுவநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், அரூர் பேருராட்சி தலைவர் இந்திராணி தனபால், துணைத் தலைவர் சூர்யா தனபால், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சண்முகநதி, தேசிங்குராஜன், தமிழழகன். கட்சி நிர்வாகிகள் முகமதுஅலி, கவிதா மோகன்தாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு, கட்சி நிர்வாகிகள் பொதிகை வேந்தன், தென்னரசு, கோடீஸ்வரன், திருவேங்கடம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com