கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா
Published on

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியாண்டில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.218 கோடி செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் ரூ.70 கோடி செலவில் நிறுவப்படும்.

ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 இடங்களில் முன்னோடி திட்ட அடிப்படையில் மொத்தம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நபார்டு - வேளாண் சந்தை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நிறுவப்படும். இந்த பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு ரூ.11,894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com