மேகதாது அணை விவகாரம்; கர்நாடக அரசை கண்டித்து பேரணி - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கர்நாடக அரசை கண்டித்து வரும் 24 ஆம் தேதி தர்மபுரி முதல் ஒகேனக்கல் வரை வாகன பேரணி நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்; கர்நாடக அரசை கண்டித்து பேரணி - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Published on

சென்னை,

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

மேலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 24 ஆம் தேதி தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் வரை வாகன பேரணியும், தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com