மேகதாது அணை விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
மேகதாது அணை விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (20.7.2026) தலைமை செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சட்டத்துறைச் செயலாளர் பி.சுமதி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com