மேகதாது விவகாரம்; உதயநிதி அமைதியாக இருப்பது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி

மேகதாதுஅணை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன் என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
Published on

காவிரி ஆற்றின் குறுக்கே பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால் அந்த திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. தமிழ்நாட்டின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

விஜய் கடிதம்

இதையடுத்து, மேகதாது அணை கட்ட விரைவில் பூமி பூஜை நடத்துவோம் என்று கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த பேச்சை தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல் அமைச்சர் விஜய்யும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, விவசாயிகளின் நலன்களையும் காக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சைலண்ட் மோடில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode(அமைதியாக) ஏன்? இப்போதும் முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாக மோடிக்கு எழுதி, தமிழக உரிமைக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கார்.

மாணிக்கம் தாகூர் கேள்வி

ஆனா “connecting call” பேசுற முன்னாள் முதல்வர் பழனிசாமி , எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல? பிரதமர் மோடி உடனடியாக மேகதாது முன்மொழி திட்டத்தை ரத்து பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பங்கை பாதுகாக்க வேண்டும். முதல் அமைச்சர் கடிதம் தெளிவாக சொல்கிறது. இந்த திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

இது அரசியல் விவகாரம் இல்ல.

இது நம்ம நீர்…

நம்ம விவசாயிகள்…

நம்ம தமிழ்நாடு உரிமை.

தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது.

முதல் அமைச்சர் கடிதத்திற்கு -க்கு முழு ஆதரவு.

தமிழ்நாடு உரிமைக்காக ஒற்றுமையாக நிற்போம்” என்றுபதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com