மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: சி.பி.ஐ. வரவேற்பு

விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: சி.பி.ஐ. வரவேற்பு
Published on

சென்னை,

செய்யாறு மேல்மா கிராமத்தில் தொழிற் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்பு தெரிவித்துள்ளது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3வது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்தார்.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு

இதுதொடபாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 விரிவாக்க திட்டத்திற்காக, 22.16 ஹெக்டேர் (சுமார் 54 ஏக்கர்) புன்செய் நிலங்களை கையகப்படுத்த கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த நில எடுப்பு அறிவிக்கையை VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

அதே வேளையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com