பா.ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பா.ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
Published on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச பொது சேவை மையம் தொடங்கப்பட்டது. இதற்கு பா.ஜ.க. மாவட்ட பொருளாளரும், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான ஜி.சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் இளைஞர்கள், தாய்மார்கள், பெரியவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும் இந்த முகாமில் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கழுமங்கலம் கிளை கழக பொறுப்பாளர் இளங்கோவன் நன்றி கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com