தென்காசியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்

தென்காசியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்
Published on

தென்காசியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் துணைச்செயலாளர் ஜான் டேவிட், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார், தெற்கு மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், நரசிம்ம சிங்கம், ராஜேந்திரன், காந்தி, தென்காசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பரமசிவன், சந்திரமதி ராஜா, ரசூல்தீன், சுடலைமுத்து, தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பாண்டியன், நாராயணன், சுடலை கனி, சேர்ந்தமரம் மஜ்ரா ஊராட்சி துணைத் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com