பெண்களின் உணர்வுகளை மதித்து நடக்க ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும் - டிடிவி தினகரன்

கல்லூரி மாணவி சத்யா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெண்களின் உணர்வுகளை மதித்து நடக்க ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

பெண்களின் உணர்வுகளை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டியது தங்கள் கடமை என்பதை பெற்றோர் மறந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சென்னையில் கல்லூரி மாணவி சத்யா கொடூரமான முறையில் இரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இளைஞர் சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது.

தாராளமானப் போதைப்பொருள் புழக்கம், கலாச்சார சீரழிவுகள், ஒரு சில திரைப்படங்களின் தவறான வழிகாட்டுதல் போன்றவையே இளைய சமுதாயத்தின் மனதில் வக்கிர சிந்தனைகளை வளர்த்துவருகின்றன. இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். அதே போன்று, ஒவ்வொரு தனி மனிதருக்கும் இதில் பங்கிருக்கிறது.

பெண்களின் உணர்வுகளை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டியது தங்கள் கடமை என்பதை பெற்றோரும் மறந்துவிடக் கூடாது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com