காரைக்குடியில் ஆணழகன் போட்டி

காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
காரைக்குடியில் ஆணழகன் போட்டி
Published on

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்பா செட்டியார் கலையரங்கில், பிரபு டெண்டல் மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

போட்டியில் 30 மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பாடிபில்டர்ஸ் கலந்துகொண்டனர். 70 கிலோ முதல் 75 கிலோ வரையும், 75 முதல் 80 கிலோ வரையும், 80-க்கும் மேல் எடை பிரிவினருக்கான போட்டிகளும் நடந்தது.

இதுதவிர பாடி பில்டிங், மென்ஸ் பிரிவு, கிளாசிக் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாடி பில்டிங் ஆகிய பிரிவுகளாக மொத்தம் 20 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, பிரபு டெண்டல் மருத்துவ குழுமங்களின் சேர்மன் துரைகருணாநிதி, முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.

ஏற்பாடுகளை மாவட்ட பாடிபில்டிங் அசோசியேசன் தலைவர் மற்றும் பிரபு டெண்டல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபு, துணைத்தலைவர் ராமசாமி, பொது செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல்தயாளன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com