ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடக்கம்

ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடங்கியது.
ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடக்கம்
Published on

ஆக்கி திருச்சி சார்பில் ஆண்களுக்கான சீனியர் லீக் ஆக்கி போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் உள்ள செயற்கை புல்தரை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆர்.சி. கிளப் அணியும், பேபி மீரான் மெமோரியல் கிளப் அணியும் மோதின. இதில் ஆர்.சி.கிளப் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 2-வது ஆட்டத்தில் பிஷப் ஹீபர் கல்லூரி அணியும், வீரபாண்டியன் மெமோரியல் கிளப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 15-1 என்ற கோல் கணக்கில் பிஷப்ஹீபர் கல்லூரி அணி வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த தொடக்க விழாவில் போட்டிக்குழு சேர்மன் கருணாகரன், ஆக்கி திருச்சியின் செயலாளர் சுப்ரமணியன், லீக் போட்டியின் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com