கூலித்தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
கூலித்தொழிலாளி பலி
Published on

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். செட்டியபட்டி பிரிவு அருகே வந்தபோது மணப்பாறையை சேர்ந்த பிரபாகர் (28) ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com