தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தக்கலை அருகே வியாபாரிதூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
Published on

தக்கலை:

தக்கலை அருகே வியாபாரிதூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளை எழுந்தன்கோட்டு கோணத்தை சேர்ந்தவர் பகவத்குமார் (வயது 35). இவருடைய மனைவி ஆஷ்மி (32). பகவத்குமார் குலசேகரம் அருகில் உள்ள மாமூட்டில் மளிகை கடை நடத்தி வந்தார்.

இதற்கிடையே உடல்நிலை சரியில்லாததால் இவர் கடையை ஒழுங்காக நடத்தவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அவர் கடையை மூடிவிட்டு எழுந்தன்கோட்டு கோணத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ஆஷ்மி கதறி அழுதார். பிறகு இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com