தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
Published on

தளி

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 46). பாத்திர வியாபாரியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தொழிலுக்கு செல்ல முடியாமல் மனவிரக்தியில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மனைவி உடுமலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

-----------

X

Daily Thanthi
www.dailythanthi.com