ஒன்றிணைப்பு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி முடிவே எங்கள் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன்

செங்கோட்டையனின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ஒன்றிணைப்பு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி முடிவே எங்கள் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது. நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம். மூத்த அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என கூறியதாக செங்கேட்டையன் தெரிவித்தது உண்மையா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் தெரிவித்துள்ளார். எங்களது முடிவு பொதுச்செயலாளர் அறிவிக்கும் முடிவை பொறுத்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com