வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்


வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்
x

பிப்ரவரிக்குள் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரையிலான வழித்தடம் 26 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது. ஏற்கெனவே முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் வடபழனி இணைக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 3-ஆவது வழித்தடமானது வடபழனி மெட்ரோவைக் கடந்து பூந்தமல்லி செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டடது. ரெயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரெயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டது. அண்மையில், வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்கு இறுதிகட்ட ஒப்புதலை இந்திய ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரிக்குள் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story