மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
Published on

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "கிறிஸ்துமஸ் தினத்தை  முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை இன்று (5-12-2025) பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com