மெட்ரோ ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, மெட்ரோ ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு நாளை (செவ்வய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை (14-4-2026) பின்பற்றப்படும்.

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com