

சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பயண அட்டைக்கு பதிலாக “சிங்கார சென்னை அட்டை” (தேசிய பொது போக்குவரத்து அட்டை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் நாளை (1-ந்தேதி) முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
இதனால், தற்போதைய மெட்ரோ பயண அட்டைகள் நாளை முதல் செல்லாது. ஆகையால், பயணிகள் அனைவரும் தங்களின் பழைய அட்டைகளை தேசிய பொது போக்குவரத்து அட்டையாக மாற்றிக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.