மெட்ரோ ரெயில் பணி: மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் பணி: மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எஸ்-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் கே.இ.சி (KEC) நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் 13.07.2024 மற்றும் 14.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி லேக் வியூ சாலையில் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை தனியார் வங்கி வழியாக வந்து வலது புறம் திரும்பி லேக் வியூ சாலையில் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com