சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம்

சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம்
Published on

சென்னை,

நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மழை அளவு குறைந்து, ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என்று என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com