நாளை முதல் காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

5, 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து விதமான பொது போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தற்போது முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. எனவே ஒரேமாதிரியான தளர்வுகளை தமிழகம் முழுவதும் அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அறிவித்துள்ளது. மேலும் 5, 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com