புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

கோப்புப்படம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






