மேட்டுப்பாளையம் - ஆட்டை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மீட்கப்பட்ட பாம்பு கல்லாறு அருகே உள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் - ஆட்டை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே மதினா நகர் உள்ளது. இங்கு குடியிருப்புகளுக்கு அருகில் ஓடை ஒன்று செல்கிறது. இப்பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு ஒன்று அந்த ஓடை அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது, சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டை கொன்று விழுங்கி கொண்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பாம்பு பிடி வீரரான பாபுவிற்கு தகவல் தெரிவித்தனர். மற்றொரு பாம்பு பிடி வீரர் சின்ராசு உஸ்மான் ஆகியோர் விரைந்து வந்து, சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு, மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் அந்த பாம்பு கல்லாறு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com