மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோயமுத்தூர்,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக ரெயில் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூர் - ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com