

சேலம்,
1934ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை தமிழகத்தின் நெற்களஞ்சிமகாக திகழும் தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இதனிடையே, குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அதேவேளை, டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1,000 அடியில் இருந்து 3,000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 78.81 அடியாக உள்ளது . மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 146 கன அடியில் இருந்து 158 கன அடியாக உள்ளது .