

சென்னை,
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக தொடர்கிறது.
இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 106 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 692 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 83.52 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 84.50 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10,579 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 84.95 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 47.067 டி.எம்.சி. ஆக உள்ளது. திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை நெருங்கியுள்ளது.