

மேட்டூர்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக குறைந்தது. இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வடகிழக்கு பருவமழைக்காக கவலையுடன் காத்திருக்கிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்நாளில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண் ணீரானது. அன்று இரவே வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த தண்ணீர் திறக்கும் அளவானது தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட் டது. தற்போது வரை அதே அளவே நீடிக்கிறது.
இதன்காரணமாக கடந்த 37 நாட்களில் சுமார் 22 அடி அளவில் அணை நீர்மட்டம் மளமள வென சரிந்து விட்டது. கடந்த மாதம் 1-ந்தேதி 91 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 69 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்மட்டம் சரிவால் அணை குட்டை போலவும், பாறைகளாகவும் காட்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,043 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 763 கனஅடியாக குறைந்தது.
மேட்டுர் அணையில் இருந்து தொடர்ந்து 45 நாடகளுக்கு டெலடா பாசனத்துக்கு தண்ணர திறக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்னும் 8 நாட்களுக்கு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். தற்போதைய நீர்வரத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது. 120 அடி உயர அணையின் நீர்மட்டம் வருகின்ற வாரத்தில் 60 அடிக்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளது.
கடந்த காலங்களில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் அணை நீர் இருப்பை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதியுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும் சூழலே தற்போது உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 15-ந் தேதியில் இருந்து 21-ந் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை முன்னதாக பெய்ய தொடங்கி தீவிரம் அடைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் கணிசமாக அதிகரிக்கும்.
அவ்வாறு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே காவிரி டெல்டா பாசனத் துக்கு வருகிற 15-ந் தேதிக்கு பிறகு தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியும். இதனால் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் பருவமழைக்காக காத்திருப்பதாக கூறுகிறார்கள். ஒரு வேளை பருவமழை தாமதமானால் டெல்டா பாசன பகுதிகளில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.