படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்


படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்
x

அணையின் நீர்மட்டம் 103.30 அடியாக இருந்த நிலையில், இன்று 102.56 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 6 நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 164 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தானது இன்று சற்று அதிகரித்து வினாடிக்கு 233 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 11 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு மிகவும் குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.30 அடியாக இருந்த நிலையில், இன்று 102.56 கன அடியாக குறைந்துள்ளது.

1 More update

Next Story