மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்வு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்வு..!
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com