எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் நிதிஉதவி

இருவேறு சம்பவங்களில் உயிர் இழந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் வரைவோலையை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் நிதிஉதவி
Published on

சென்னை,

எம்.ஜி.ஆரால் 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கப்பட்ட சில மாதங்களில் 1973-ம் ஆண்டு மே மாதம் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக பணிபுரிந்து வந்த வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆறுமுகம் தி.மு.க.வினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஆறுமுகத்தின் மனைவி சுந்தரி தான் வாழ்ந்து வரும் வீட்டை, கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துவிட்டு திருப்ப முடியாமல் தவித்து வந்தார். அவரது வேண்டுகோளின்படி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில், அ.தி.மு.க. ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ரூ.4,80,913-க்கான வங்கி வரைவோலையை(டி.டி.) சுந்தரியிடம் வழங்கினர்.

பூர்ணகலாவுக்கு ரூ.2 லட்சம்

இதே போன்று, அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பணியாற்றியபோது, நெல்லை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் எம்.ரவிக்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் அவரது மனைவி ஆர்.பூர்ணகலாவிடம் குடும்ப நல நிதியுதவியாக ரூ.2 லட்சத்துக்கான வரைவோலையையும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com