எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற்றது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
Published on

ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆம்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றி அன்னதானம் மற்றும் சேலைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லி பாபு, மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com