எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Published on

நெல்லை மாவட்டத்தில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வள்ளியூர்

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆா. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வெண்ணிமலை யாதவ், முருகேசன், சுடலைக்கண்ணு, முத்துலிங்கம், சோரீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொங்கந்தான்பாறை

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் புதுக்குளம், கொங்கந்தான்பாறை ஆகிய ஊர்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற்றது. புதுக்குளம் பஞ்சாயத்து தலைவரும், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சி.முத்துக்குட்டி பாண்டியன் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் பிரம்மா பேச்சிமுத்து, தசரதன், நாராயணன், பரமசிவன், மரியராஜ், நிர்வாகிகள் பழனிபாண்டியன், அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை

திசையன்விளையில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய பஸ் நிலைய சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு அமைப்பு செயலாளர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மலர்தூவி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பேரூராட்சி துணைத்தலைவரும், நகர செயலாளருமான ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

சவுந்தரபாண்டியபுரம்

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் ஒன்றியம் சவுந்தரபாண்டியபுரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நாராயணபெருமாள், எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் பாசறை மாவட்ட பொருளாளர் பாலரிச்சர்ட், நிர்வாகிகள் வள்ளியூர் சுந்தர், ரவி, சவுந்தரபாண்டியன், முருகன், மாரி, பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பை-துவரம்பாடு

அம்பை நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அம்பை அ.தி.மு.க. நகர செயலாளர் அறிவழகன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இட்டமொழி அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆர். பாசறை நிர்வாகிகள் பண்டாரம் நாடார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ராதாபுரம்

ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலா ராஜா, பரமேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மின்னல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com