எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 14 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 14 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். #PuzhalPrison
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 14 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை
Published on

சென்னை,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 14 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகளும், இரண்டாம் கட்டமாக பெண்கள் உட்பட 52 கைதிகளும், மூன்றாம் கட்டமாக 47 ஆயுள் தண்டனை கைதிகளும் நான்காம் கட்டமாக 11 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து ஜந்தாம் கட்டமாக இன்று 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com