

சென்னை
தமிழக அரசியலில் பெரிய சக்தியாக இருந்தவர் எம்ஜிஆர். அவர் 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி பிறந்தார். எம்ஜிஆரின் நூற்றாண்டு கடந்த ஜனவரி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் செப்.30 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கபட்டு உள்ளது
இந்த அழைப்பிதழில் மு.க ஸ்டாலின், கனிமொழி வாழ்த்துரை என்று போடப்பட்டுள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதைவிட டிடிவி தினகரன் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்று உள்ளது.
மேலும் டி.கே. எஸ். இளங்கோவன், பி.கே. சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், கனிமொழி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் டிடிவி தினகரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.