எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை


எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை
x

இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா கோவிலில் படம் திறக்கப்படுகிறது.

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ெஜயலலிதா ேகாவிலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது உருவப்படம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெயலலிதா கோவிலில் திறக்கப்படுகிறது. இதையொட்டி மதுரைக்கு வரும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமாரின் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

1 More update

Next Story