மிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்

ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் வரும் 16-ந்தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வரும் 17-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com