

சென்னை,
சென்னையில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க உரிமம் மற்றும் மைக்ரோ சிப் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் மாடுகளை வைத்திருப்போர் அவற்றிற்கு மைக்ரோசிப் பொறுத்தி, உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.100 கட்டணம் செலுத்தி மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறலாம் என்றும், உரிமம் மற்றும் மைக்ரோ சிப் இல்லாத மாடுகளுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மார்ச் 18ம் தேதிக்குள் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (30.01.2026) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமர குருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.