வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Published on

 ரேஷன் கார்டு

கரூர் மாவட்டத்தில், வெளிமாநிலங்களில் இருந்து, நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு இ-ஷ்ரம் எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் மனுதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கி உள்ளவர்களுக்கு புதிய மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும், தமிழ்நாட்டில் தற்காலிகமாவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் இ-ஷ்ரம் மூலம் விண்ணப்பித்து, உரிய படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். இந்த மனுவினை சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய ரேஷன் கார்டு பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெறலாம்.

எனவே, வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து, கரூர் மாவட்டத்தில் வசிக்கும் ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு இ-ஷ்ரம் எனும் இணைய வழி தரவு தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com