ஆரல்வாய்மொழி அருகே காயத்துடன் தவித்த மிளா

ஆரல்வாய்மொழி அருகே காயத்துடன் தவித்த மிளாவ மீட்டனர்.
ஆரல்வாய்மொழி அருகே காயத்துடன் தவித்த மிளா
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை பண்ணையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மிளா குட்டி காலில் காயமடைந்த நிலையில் தாயுடன் செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனசரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் வனக்காப்பாளர்கள் சிவராமன், பிரதிபா தங்கராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் சபரிசுதாகர், சிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு காயத்துடன் கிடந்த மிளா குட்டியை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மிளாகுட்டியை தாயுடன் அனுப்பி வைத்தனர். அத்துடன் அந்த குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

---

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com