கிருஷ்ணகிரியில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு

பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7.52 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வின் மையமானது பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வால் கட்டிடங்கள் லேசாக குலுங்கிய நிலையில், அங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com